If you view full screen pls click the image... If you save image just Right Click the image - save images as..

kavithai

 

 

Friendship 

உன் தோழியா 

உனக்கு சொகம் வரும் 

போது ஏன் மழையும் 

சோர்ந்து வருகின்றது 

நீ கண்ணிர் விடுவதை 

பார்க்க முடியாமல் 

தானா மேகம் முதலில் 

கண்ணிர் வடிகின்றது...

 
 

நீ மட்டுமே தோழியாக வேண்டும்......... 

தொடரும் நாட்களெல்லாம் 
நீ மட்டுமே தோழியாக 
தொடர வேண்டும் என் வாழ்வில்... 

பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் 
பறிகொடுத்த இன்பங்களாகட்டும் 
அத்தனையும் பகிர்ந்துகொண்ட 
நீயும், நானும் இனிவரும் நாட்களிலா 
பிரிந்து விடப்போகிறோம். 

தொடரும் நம் நட்பில் 
தோற்க்காதிருக்கட்டும் என்றும் அன்பு. 

எத்தனையோ நாட்கள் 
நம் நட்பில் கரைந்து 
நன்றாய் வாழ்ந்த்திருந்தாலும், 
இன்று உன் குடும்பம், 
என் குடும்பம் என்று 
இருவேறு தீவுகள் ஆகிவிட்டோம். 

இருந்தும் தொலைபேசி வழியாக 
இருவரும் தொலைந்துகொண்டுதான் இருக்கிறோம். இன்றுவரை நம் நட்பில்.....

 

 

நம் நட்பு கவிதைகளில் வாழ  

தோழியே 

என் நட்புக்கான கவிதைகளில் கூட 

வார்த்தைகான அர்த்தம் மாறிவிட 

கூடாது என்பதற்காகத்தான் 

மனம் அச்ச படுகிறது 

சிறிதும் நம் நட்பை சேத படுத்தாத 

வார்த்தைகளை தேர்ந்தெடுக்கிறேன் 

நம் நட்பு கவிதைகளில் வாழ 

 

 

என் மனக்குறை  


தோழியிடம் 

என் குறைகளை சொல்லி கொண்டே 

போகும் எனக்கு தெரியவில்லை 

என்று காது கொடுத்து கேட்க போகிறேன் 

அவளது குறைகளை என்று தெரியாமல் 

அதுவே பெரிய குறையாய் என்னிடம்

 

 

 

மீண்டும் எமன் எப்படி வருவான்? 

உணர்வற்றுக் கிடந்த எனக்கு 
உயிராய் உனைக் கொடுத்து 
ஊக்கம் கொஞ்சம் தந்து, உன் 
உயிரை மட்டுமேன் பறித்துவிட்டான் 
அந்த சைகோ இறைவன்..!! 

கேட்க ஆளில்லை என்ற நினைப்பில் 
காண்பதை எல்லாம் அழிப்பானா 
அந்தக் காலன்? 
என்னருகே இருந்த சுகத்தை அழித்தாய், 
இப்போது 
என்னுள்ளே இருப்பவளை என்ன செய்வாய்? 
நான் இருக்கும் வரையில்..! 

நான் இருக்கும் போதே 
நீ இறந்ததாய்.. 
இப்போதோ 
நான் இறக்கும் வரையில் 
நீ இருப்பாய் என் உயிராக..!! 

 

 

யார் உண்மையானவர்" 

மறக்க நினைப்பவள் 

காதலி....., 

நினைக்கவும் மறப்பதில்லை 

நண்பன்...,

 
 

"நண்பன்" 

உன்னுடன் பேசுபவன், 

உன்னை பற்றி பேசுபவன், 

உன் நண்பன்...... 

உனக்காக பேசுபவனே, 

உண்மையான நண்பன்.........!

 

 

நண்பனே 

நீ இல்லாத வாழ்க்கை......? 
நீரில்லாத பூமி போன்றது....!

 

 

 

சுயநலமாய் ஒரு நட்பு 

என்றும் எனக்காக நீ இருக்க, 
இருந்தும் சுயநலமாய் 
கேட்கின்றேன், 
தோள் கொடு தோழா! 
நால்வரில் ஒருவனாய், 
என் இறுதி ஊர்வலத்திலும்

 

 

 

தோழியே ஏனடி நீ மறந்தாய்  


முழுதாய் விலக முடியவில்லை 

ஏன் எனக்கு உன்னை புரியவில்லை 

விடுகதையாய் இருந்தால் 

விடை கிடைக்கும் விடையை தேடி 

மனம் வெடிக்கும் 

உன் மௌனத்திற்கும் அர்த்தம் உண்டு 

இதய துடிப்பிற்கும் சப்தம் உண்டு 

என்றும் உயிராய் உன் நட்பே 

மனதை மறைப்பது நட்பில் தவறே 

தாயாய் நான் உணர்ந்தேன் 

உன் மனதின் பாரத்தை 

நட்பிலும் தாய்மை உண்டு என்பதை 

ஏனடி நீ மறந்தாய் 

சொல்லடி மனம் விட்டு 

வா பறப்போம் உலகை விட்டு

 
 

தோழியே உன் நட்பில் தோற்று போகிறேன்  

எனக்கு பிடித்தவைகளையே உனக்கு பிடித்ததாய் 

பொய் சொல்லும் போதும் நான் ரசிக்கின்ற 

எல்லாம் அழகு என்று வர்ணிக்கும் போதும் 

சில கவிதைகளின் பிழையை என் மனம் 

நோகாமல் சுட்டிக்காட்டும் போதும் 

என் எல்லா கவிதைகளையும் ரசிக்கும் 

முதல் ரசிகையாய் நிற்கும் போதும் 

எனக்காக உனக்கு பிடித்த ஒன்றை 

விட்டு கொடுக்கும் போதும் 

நிஜமாய் தோற்று போகிறேன் 

தோழியே உன் நட்பில்

 

 

நட்பு  

நாம் 
வாழும் "இடம்" 
வெவ்வேறாக 
இருந்தாலும், 


நாம் 
வாழும் "வாழ்க்கை" 
ஒன்றுதானே ! 

"நட்புடன்" !

 

 

என் நண்பன்  


நண்பா 

உன்னுடன் பழகிய தருணங்கள் 

தங்க நிமிடங்கள் வைர நாட்கள் 

சொல்வது மிகை என்றால் 

என் நட்பு உண்மையல்ல 

அதனால் சொல்லுகிறேன் 

விழிகளால் அவன் அறிவான் 

என் குறைகளை தான் களைவான் 

புன்னகை பூத்து நிற்பான் 

பொறாமை கொள்ள வைப்பான் 

இன்னொரு ஜென்மம் என்றால் 

அவன் நட்பு கிடைக்க வேண்டிடுவேன் 

கேட்டவை தான் பலிக்க 

அந்த வானையும் தாண்டிடுவேன்

 

 

உனக்கென ஒரு நண்பனாய் என்றும்  


சோகத்துடன் சொல்கிறாய் வீட்டில் 

பெண்பார்க்க வர போகிறார்கள் என்று 

உன் வாழ்கையை மறந்து 

நான் ஜெய்க்கும் வரை இருக்கிறேன் 

என்னுடன் இருக்கிறேன் தோழியாக 

என்கிறாய் 

நான் தோல் சாய உனக்கு பிறகு 

எனக்கு யாரும் இல்லை என்று 

கவலை கொள்கிறாய் எப்படி 

முடிகிறது உன்னால் எப்போதும் 

ஒரு தோழியாய் என்னை மட்டும் 

கண்ணுக்கு கண்ணாய் நினைக்க 

உன் பெற்றோருக்கு பிறகும் 

உனக்கு யாரும் இல்லை என்ற 

கவலை உனக்கு இல்லை 

உன்னை பற்றி ஏன் கவலை கொண்டதில்லை 

நிஜமாய் எதிர்காலத்தில் உனக்கு 

கவலை வேண்டாம் நானிருப்பேன் 

உனக்கென ஒரு நண்பனாய் என்றும் 

 

 

இணைவதும் பிரிவதும் இயல்பே...! 

இணைந்திருப்பதும் ,பிரிந்திருப்பதும் நிரந்தமல்ல..! 
இணைவதின் பரிசு-சந்தோஷம் 
பிரிவதின் பரிசு -கண்ணீர் 
சந்தோஷத்தை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்...!

 

 

அன்புடன் நட்பு  

எழுத்துப் பிழையின்றி 
எழுத நினைக்கும் 
"காதல்" 
எழுத்துப் பிழையின்றி 
படிக்க நினைக்கும் 
"நட்பு" 

 

 

தோழியே உன்னால் ஏன் முடியவில்லை ? 


தோழியே 

உன்னால் முடியும் என்று எனக்கு 

என்னை காட்டி விட்டு 

ஏன் உன்னால் முடியவில்லை 

சொல்லடி 

என் வாழ்வின் கடைசிநாள் வரை 

நட்புடன் வருவேன் என்று சொல்ல மட்டும் 

பெண் என்பதாலா 

பெண்ணாய் பிறந்ததாலா

 

 

உண்மை நட்பு  

எதனை வருடம் பழகினோம், என்பதை விட 
எத்தனை, விஷயங்களை [பகிர்ந்து கொண்டோம் என்பதே சிறந்த நட்பு,,,,,,

 

நண்பன் டா  

களைந்து போவதற்கு உன் நினைவுகள் ஒன்றும் மேகம் இல்லை, 

என் கண்களில் விளிம்பில் நிற்கும் 
கண்ணீர் இல்லை, 

என் கண்களுக்குள் இருக்கும் கரு விழிகள் தான் உன் நட்பு................

 

நமக்கான நட்பு 

என் காதலியை 
உனக்கு நான் 
அறிமுகம் செய்து வைத்தபோது 
நீ விழுங்கிய 
எச்சிலில் இருந்தது 
நமக்கான நட்பு

நட்பில் கரைந்த ஞாபகங்கள்!! 

ஒரு காத்திருப்பின் 
இடைவேளையில் 
நட்பில் கரைந்த 
ஞாபகங்கள்!! 

 

மரணமே வந்தாலும் 

அம்மா வயிற்றில் சுமந்தால் 
அப்பா தோளில் சுமந்தார் 
காதலி இதயத்தில் சுமந்தால் 
நண்பா 
நான் உன்னை சுமக்கவில்லை 
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல 

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும் 
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது 

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும் 
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும் 
உரவாக அல்ல என் உயிர் நட்பாக 

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை 
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை 

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட 
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது

Your Ad Here